இலங்கையின் மேல், வடமேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா, தென் மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும், மன்னார் மாவட்டத்துக்கும் கடுமையான மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (3) முற்பகல் 11.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவித்தல், இரவு 11.30 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாகாணங்கள் மற்றும் மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன், கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளும் அதிகமாக காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய அசம்பாவிதங்கள் மற்றும் சேதங்களைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.








