நுகர்வோர் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு 2021ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட பாம் எண்ணெய் இறக்குமதித் தடையை மீண்டும் நீக்குவதற்கு சில தரப்புகள் நடவடிக்கை எடுத்து வருவதாக நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.
எக்காரணம் கொண்டும் பாம் எண்ணெய் இறக்குமதி மீதான தடையை நீக்க வேண்டாம் என அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பான உத்தியோகபூர்வ கடிதமொன்றை அவர் நேற்று (2) வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்கவிடம் கையளித்துள்ளார்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரஞ்சித் விதானகே, பாம் எண்ணெய் இறக்குமதித் தடையை நீக்குவதற்கான முயற்சிகளுக்குப் பின்னால் மோசடி வர்த்தகர்களும் ஊழல் அதிகாரிகளும் இருப்பதாகக் குற்றஞ்சாட்டினார்.
மேலும், இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத்தை விழிப்புணர்வூட்டுவதாகவும், நாட்டிற்கு பாம் எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான தடையை நீக்க வேண்டாம் என அரசாங்கத்திடம் கோருவதாகவும் அவர் தெரிவித்தார்.








