முன்னாள் கொழும்பு மேயர் ரோசி செனாநாயக்கவின் மகனும், முன்னாள் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளருமான கனிஷ்க செனாநாயக்க தனது 41ஆவது வயதில் காலமானார்.
அவரது மறைவு தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ சமூக ஊடகப் பதிவொன்றின் மூலம் அறிவித்துள்ளார்.
“எமது பார்வையில் இருந்து மறைந்துவிட்டார். ஆனால் எமது இதயங்களில் இருந்து ஒருபோதும் மறையமாட்டார். சகோதரரே, அமைதியாக இளைப்பாறுங்கள்” என ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கனிஷ்க செனாநாயக்க 2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்டிருந்தார்.
இளம் வயதிலிருந்தே அரசியலில் ஈடுபட்டு வந்த அவர், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளுடன் தொடர்புபட்டிருந்தார்.
அத்துடன், பல்வேறு நிறுவனங்களின் பணிப்பாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்த அவர், பெருநிறுவனத் துறையிலும் பணியாற்றியுள்ளார்.
ரோசி செனாநாயக்க மற்றும் மறைந்த அதுல செனாநாயக்க தம்பதியினரின் மூன்று பிள்ளைகளில் கனிஷ்க செனாநாயக்க மூத்தவராவார்.








