ஹட்டன், டிக்கோயா பகுதியில் வர்த்தக நிலையமொன்றுக்குள் வயோதிப தம்பதியினரை கூரிய ஆயுதத்தால் கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
82 வயதுடைய குறித்த தம்பதியினர் டிக்கோயா பகுதியில் வர்த்தக நிலையமொன்றை நடத்தி வந்த நிலையில், கடந்த மே 21ஆம் திகதி கொலை செய்யப்பட்டனர்.
இரட்டைக் கொலையைத் தொடர்ந்து சந்தேகநபர் தங்க நகைகளையும் கொள்ளையிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், பாதுகாப்பில் இருந்த பொலிஸ் அதிகாரிகளிடமிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதையடுத்து, விசேட பொலிஸ் குழுவினர் முன்னெடுத்த நடவடிக்கையில், யாழ்ப்பாணம் பகுதியில் மறைந்திருந்த சந்தேகநபர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.








