அகிம்சையின் முன்னோடியான மகாத்மா காந்தியின் 157ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, ஒக்டோபர் 2ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெற்ற காந்தி ஜெயந்தி நினைவேந்தல் நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்து கொண்டார்.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதமரும் இந்திய உயர்ஸ்தானிகரும் மகாத்மா காந்தியின் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.
மகாத்மா காந்தி தனது வாழ்க்கை மற்றும் தத்துவத்தின் ஊடாக உலகிற்கு வழங்கிய அமைதி, அகிம்சை மற்றும் நல்லிணக்கத்தின் செய்தியை நினைவுகூரும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, அரச அதிகாரிகள் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு










