இலங்கையின் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று (01) சிறிய மாற்றம் பதிவாகியுள்ளது.
புதன்கிழமையுடன் ஒப்பிடுகையில், சில வங்கிகளில் அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விகிதங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதுடன், சில வங்கிகளில் விகிதங்கள் மாற்றமின்றி காணப்படுகின்றன.
செலான் வங்கி
அமெரிக்க டொலரின் கொள்வனவு விகிதம் ரூ. 326.35 ஆகவும், விற்பனை விகிதம் ரூ. 335.60 ஆகவும் மாற்றமின்றி காணப்படுகிறது.
NDB வங்கி
அமெரிக்க டொலரின் கொள்வனவு விகிதம் ரூ. 326.10 ஆகவும், விற்பனை விகிதம் ரூ. 335.10 ஆகவும் மாற்றமின்றி உள்ளது.
மக்கள் வங்கி
கொள்வனவு விகிதம் ரூ. 326.57 இலிருந்து ரூ. 326.62 ஆக அதிகரித்துள்ளது. விற்பனை விகிதம் ரூ. 334.67 இலிருந்து ரூ. 334.72 ஆக அதிகரித்துள்ளது.
கொமர்ஷல் வங்கி
கொள்வனவு விகிதம் ரூ. 324.84 இலிருந்து ரூ. 324.59 ஆகக் குறைந்துள்ளது. விற்பனை விகிதமும் ரூ. 334.75 இலிருந்து ரூ. 334.50 ஆகக் குறைந்துள்ளது.
சம்பத் வங்கி
அமெரிக்க டொலரின் கொள்வனவு விகிதம் ரூ. 326.75 ஆகவும், விற்பனை விகிதம் ரூ. 334.75 ஆகவும் மாற்றமின்றி காணப்படுகிறது.







