நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளது.
மேலும், அவர் வெளிநாடு செல்வதைத் தடுக்கும் வகையில் வெளிநாட்டு பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு இதுகுறித்து அறிவிக்குமாறும், திறந்த பிடியாணையை பொலிஸ் மா அதிபர் ஊடாக நடைமுறைப்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.








