கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) அடிப்படையில் அளவிடப்படும் இலங்கையின் ஒட்டுமொத்த பணவீக்கம், 2026 செப்டெம்பர் மாதத்தில் 8% ஆக பதிவாகியுள்ளது.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தகவலின்படி, இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பதிவான 8% பணவீக்க வீதத்துடன் ஒப்பிடுகையில் மாற்றமற்ற நிலையாகும்.
உணவுப் பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 8.5% ஆக இருந்த நிலையில், செப்டெம்பரில் 8.7% ஆக சிறிதளவு அதிகரித்துள்ளது.
அதேவேளை, உணவு அல்லாத பொருட்களுக்கான பணவீக்கம் 7.7% ஆக மாற்றமின்றி தொடர்கிறது.
முழுமையான அறிக்கை: https://www.statistics.gov.lk/







