கொழும்பு பொரல்லை அஹதியா இஸ்லாமிய கல்வி நிலையத்தினால், தேசிய ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்திற்காக ஆற்றிவரும் சேவைகளைப் பாராட்டி சர்வமத தலைவர்களுக்கு ‘சமாதான விருது’ வழங்கப்பட்டுள்ளது.
கெளரவ சாஸ்த்ரபதி கலகம தம்மரன்ஸி நாயக தேரர், சிவஸ்ரீ கலாநிதி பாபுசர்மா குருக்கள், அல்-ஹாஜ் அஷ்-ஸெய்யித் கலாநிதி ஹஸன் மெளலானா அல்-காதிரி உள்ளிட்ட சர்வமத தலைவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
2026 செப்டெம்பர் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு தெமட்டகொடை எம்.ஐ.சி.எச். பாஷா விழா மண்டபத்தில் நடைபெற்ற மீலாத் விழாவில் இந்த விருது வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் 1501ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பொரல்லை அஹதியா இஸ்லாமிய கல்வி நிலையத்தினால் இந்த மீலாத் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விருதுகளை பொரல்லை அஹதியா இஸ்லாமிய கல்வி நிலையத்தின் அதிபரும் அகில இலங்கை சமாதான நீதிவானுமான அல்-ஹாஜ் ஷிப்லி ஹாஷிம் வழங்கி வைத்தார்.








