2026ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் இலங்கைக்கு ஒரு இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, செப்டெம்பர் முதல் மூன்று வாரங்களில் 107,093 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இதனுடன், 2026ஆம் ஆண்டின் ஜனவரி முதல் செப்டெம்பர் வரையிலான மொத்த சுற்றுலாப் பயணிகள் வருகை 1,642,215 ஆக அதிகரித்துள்ளது.
செப்டெம்பர் மாதத்தில் இந்தியா தொடர்ந்து இலங்கையின் முக்கிய சுற்றுலா மூலச் சந்தையாக காணப்படுகிறது. இந்தக் காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து 32,536 பேர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இது மொத்த வருகைகளில் சுமார் 30% ஆகும்.
அதனைத் தொடர்ந்து,
- ஐக்கிய இராச்சியம் – 7,906
- அவுஸ்திரேலியா – 7,393
- சீனா – 6,409
- ஜேர்மனி – 5,440
என்ற அடிப்படையில் சுற்றுலாப் பயணிகள் வருகை பதிவாகியுள்ளது.
2026 ஜனவரி முதல் செப்டெம்பர் வரையிலான காலப்பகுதியிலும் இந்தியா முதலிடத்தில் உள்ளது. அந்தக் காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து 418,019 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.
அதே காலப்பகுதியில் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 157,895, சீனாவிலிருந்து 107,237, ஜேர்மனியிலிருந்து 95,441 மற்றும் அவுஸ்திரேலியாவிலிருந்து 83,431 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.







