மோசமான வானிலை காரணமாக நுவரெலியா மற்றும் ஹட்டன் கல்வி வலயங்களுக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் நாளை மூடப்படும் என மத்திய மாகாண கல்விச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, மத்திய மாகாணத்தின் ஏனைய கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளை நடத்துவதா இல்லையா என்பது தொடர்பில் அந்தந்த கல்வி அதிகாரிகள் தீர்மானிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.








