அப்ரா அன்சார்
கொழும்பு– அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் தொடர்பான முடிவு தன்னுடையது மட்டுமே என்றும், உடன்பாடு அல்லது அழிவு என்பதே தெரிவு என்றும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்றிய ஒரு நாள் பின்னர், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் அதே மேடையில் பதிலளித்துள்ளார்.
ஈரான் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு எதிராக தமது நாடு தொடர்ந்து தற்காத்துக்கொள்ளும் என உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்திய பெசெஷ்கியான், அந்தத் தாக்குதல்களை “கோழைத்தனமான” தாக்குதல்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் அழுத்தத்திற்கு ஈரான் ஒருபோதும் அடிபணியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நியூயோர்க், ஐ.நா. தலைமையகத்திலிருந்து அல் ஜசீராவின் கேப்ரியல் எலிசோண்டோ வழங்கிய செய்தியின் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
(அல் ஜசீரா)








