2026 ஒகஸ்ட் மாதத்திற்கான தேசிய முதன்மை பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு 8.1 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
திணைக்களம் இன்று (21) வெளியிட்டுள்ள இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் அடிப்படையிலான பணவீக்க அறிக்கையின்படி, ஜூலை மாதத்தில் 7.2 சதவீதமாக பதிவாகியிருந்த தேசிய பணவீக்கம், ஒகஸ்ட் மாதத்தில் 8.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இதன்படி, உணவுப் பணவீக்கம் 4.9 சதவீதத்திலிருந்து 6.6 சதவீதமாகவும், உணவு அல்லாத பணவீக்கம் 9.2 சதவீதத்திலிருந்து 9.3 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.
அதேவேளை, போக்குவரத்துத் துறைக்கான பணவீக்கம் ஜூலை மாதத்தில் 18.9 சதவீதமாக காணப்பட்ட நிலையில், ஒகஸ்ட் மாதத்தில் 19.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.






