கடந்த சில மணிநேரங்களில் அதிகபட்சமாக கேகாலை மாவட்டத்தின் மாலிபொட பகுதியில் 103.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
காலி மாவட்டத்தின் தெல்வல தேயிலைத் தோட்டப் பகுதியில் 93.5 மில்லிமீற்றரும், குருதியபொத்த தேயிலைத் தோட்டப் பகுதியில் 87.5 மில்லிமீற்றரும் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
மேலும், களுத்துறை மாவட்டத்தின் நேபொட பகுதியில் 83.0 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
நாட்டில் நிலவும் தீவிர தென்மேற்கு பருவமழை காலநிலை காரணமாக பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த மழை மற்றும் இடி, மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.








