ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் உள்ளிட்ட சில தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தம் நிறைவடைந்துள்ளது.
நேற்று (18) நள்ளிரவுடன் வேலைநிறுத்தம் நிறைவுக்கு வந்ததாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.
ரயில்வே பொது முகாமையாளரை பதவியில் இருந்து நீக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.








