இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (18) அமெரிக்க டொலருக்கு நிகராக சற்று அதிகரித்துள்ளது.
வியாழக்கிழமையுடன் ஒப்பிடுகையில், நாட்டின் முக்கிய வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ.334.00 முதல் ரூ.337.00 வரை பதிவாகியுள்ளது.
செலான் வங்கியில் டொலரின் கொள்வனவு விலை ரூ.327.75 ஆகவும், விற்பனை விலை ரூ.337.00 ஆகவும் மாற்றமின்றி காணப்படுகிறது.
NDB வங்கியில் கொள்வனவு விலை ரூ.327.75 இலிருந்து ரூ.327.00 ஆகவும், விற்பனை விலை ரூ.336.75 இலிருந்து ரூ.336.00 ஆகவும் குறைந்துள்ளது.
மக்கள் வங்கியில் கொள்வனவு விலை ரூ.328.15 இலிருந்து ரூ.326.92 ஆகவும், விற்பனை விலை ரூ.336.29 இலிருந்து ரூ.335.03 ஆகவும் குறைந்துள்ளது.
கொமர்ஷல் வங்கியில் கொள்வனவு விலை ரூ.326.08 இலிருந்து ரூ.324.09 ஆகவும், விற்பனை விலை ரூ.336.00 இலிருந்து ரூ.334.00 ஆகவும் குறைந்துள்ளது.
சம்பத் வங்கியில் கொள்வனவு விலை ரூ.328.50 இலிருந்து ரூ.326.50 ஆகவும், விற்பனை விலை ரூ.336.50 இலிருந்து ரூ.334.25 ஆகவும் குறைந்துள்ளது.






