ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர் ஒருவருக்காக சட்டவிரோத வெளிநாட்டு பயண ஆவணத்தைத் தயாரிக்க உதவியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட விசாரணைப் பிரிவு அதிகாரிகள் நேற்று (17) காலை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள வளாகத்தில் வைத்து சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கம்பஹாவைச் சேர்ந்த 42 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் CID-யின் விசேட விசாரணைப் பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.








