இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரனை கட்சியில் இருந்து நீக்கியமைக்கு எதிராக, கட்சியின் தற்போதைய பதில் தலைவர், பதில் செயலாளர் உள்ளிட்ட 5 தரப்பினருக்கு எதிராக மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றில் இன்று (16) வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த வருடம் கட்சியின் விதிகளை மீறி பா.அரியநேந்திரன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாகத் தெரிவித்து, தற்போதைய பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் பொதுச்செயலாளர் சத்தியலிங்கம், நிர்வாக செயலாளர் குணநாயகம் மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சி ஆகியோருக்கு எதிராக சிரேஷ்ட சட்டத்தரணி பிரேம்நாத் ஊடாக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கை மாவட்ட நீதிபதி இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நிலையில், மேலதிக விசாரணைக்காக எதிர்வரும் டிசம்பர் 16ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.








