கொழும்பு, களுத்துறை மற்றும் கேகாலை மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) இன்று (15) காலை 10.00 மணிக்கு இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை நாளை (16) காலை 10.00 மணி வரை 24 மணித்தியாலங்களுக்கு அமுலில் இருக்கும்.
இதன்படி, கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்க பிரதேச செயலகப் பிரிவு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளுக்கும், களுத்துறை மாவட்டத்தின் தொடங்கொட, புளத்சிங்ஹல, பேருவளை, இங்கிரிய, மத்துகம, பாலிந்தநுவர மற்றும் வலல்லாவிட்ட பகுதிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கேகாலை மாவட்டத்தின் வரகாப்பொல மற்றும் ருவன்வெல்ல பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளுக்கும் இந்த எச்சரிக்கை பொருந்தும்.








