தாய்லாந்தில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் 10,000 இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க தாய்லாந்து அரசு தீர்மானித்துள்ளது.
தகவல் தொழில்நுட்பம், சுற்றுலாத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்த வேலைவாய்ப்புகள் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையர்களை தாய்லாந்துக்கு வேலைவாய்ப்புக்காக அனுப்புவது தொடர்பாக இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையே இரு விசேட ஒப்பந்தங்கள் நேற்று (14) கைச்சாத்திடப்பட்டுள்ளன.
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தின் தாய்லாந்து விஜயத்தின்போது இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை – தாய்லாந்து இடையிலான தொழிலாளர் துறை சார்ந்த இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.








