கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு பலத்த காயமடைந்த 18 வயதுடைய இளைஞர் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (14) இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் கொட்டாஞ்சேனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வெல்லம்பிட்டியைச் சேர்ந்த குறித்த இளைஞர், தனிப்பட்ட தகராறு காரணமாக இருவரால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, யக்கலமுல்ல – மொரகெட்டிய பகுதியில் 54 வயதுடைய நபர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
பழைய பகை காரணமாக ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதையடுத்து இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் 27 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், யக்கலமுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








