இலங்கையின் சிரேஷ்ட கலைஞரும் நடன ஆசிரியையுமான தயா நெல்லம்பிட்டிய தனது 91ஆவது வயதில் காலமானார்.
களுபோவிலையில் உள்ள அவரது இல்லத்தில் அவர் காலமானதாக குடும்ப வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நாட்டின் பல முன்னணி பாடசாலைகளில் நீண்டகாலமாக நடன ஆசிரியையாக பணியாற்றிய தயா நெல்லம்பிட்டிய, ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு கண்டிய பாரம்பரிய நடனக் கலையை கற்பித்த சிறந்த ஆசிரியையாக அறியப்படுகிறார்.
பிரபல பாடகர் சேன பொன்சேகாவின் மனைவியான இவர், தற்போதைய இலங்கை கலைத்துறையில் உள்ள பல மூத்த கலைஞர்களின் ஆரம்பகால ஆசிரியையாகவும் திகழ்ந்துள்ளார்.
இலங்கையின் பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகள், நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் நடனக் கலையைப் பாதுகாத்து, அவற்றை எதிர்கால சந்ததியினருக்கு கொண்டு சேர்ப்பதில் அவர் ஆற்றிய பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.
அவரது இறுதிச் சடங்குகள் நாளை (15) நடைபெறவுள்ளதாக குடும்ப வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.








