கெஷ்ம் தீவுக்கு அருகே ஈரானிய வர்த்தகக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்காவைச் சாடியுள்ள ஈரானிய அதிகாரி ஒருவர், “அமெரிக்க பயங்கரவாத எதிரி” என குற்றம்சாட்டியுள்ளார்.
இதற்கிடையில், செங்கடலில் முக்கிய கடல்வழிப் பாதையான பாப் அல்-மந்தப் நீரிணையை கட்டுப்படுத்துவது தொடர்பான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஹூதி படைகளுக்கும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற யெமன் அரசுப் படைகளுக்கும் இடையே பரஸ்பர தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன.
இந்த மோதல்களால் யெமனில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஏற்கனவே உலகின் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடிகளில் ஒன்றாகக் காணப்படும் யெமனின் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது.
இந்நிலையில், பிராந்திய பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் ஹோர்முஸ் நீரிணை தொடர்பாக வளைகுடா நாடுகளுடன் கலந்துரையாட ஈரான் திங்கட்கிழமை ஓமானில் சந்திப்பொன்றை நடத்தவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.








