சவுதி அரேபியாவின் எண்ணெய் குழாய் செயல்பாடு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சில நாட்களுக்குள் எண்ணெய் விநியோகம் மீண்டும் தொடங்கப்படாவிட்டால், உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் 4 சதவீதம் வரை பாதிப்பு ஏற்படக்கூடும் என சவுதி எண்ணெய் கொள்வனவாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளதாக ரொய்டர்ஸ் (Reuters) செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஏற்றுமதிக்காக சேமித்து வைக்கப்பட்டுள்ள எண்ணெய் கையிருப்பு தீர்ந்துவிடக்கூடும் என்றும், இதனால் உலகளாவிய எண்ணெய் விநியோகம் மேலும் பாதிக்கப்படும் என்றும் எண்ணெய் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் தொடரும் போரினாலும், ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதாலும் ஏற்கனவே உலகளாவிய எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் புதிய பாதிப்பு நிலைமையை மேலும் மோசமாக்கக்கூடும்.
ஈராக்கியப் பகுதியில் இருந்து நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலைத் தொடர்ந்து, சவுதி அரேபியா தனது East-West எண்ணெய் குழாய் வழியான எண்ணெய் பம்பிங் நடவடிக்கைகளை வெள்ளிக்கிழமை நிறுத்தியது.
சேதத்தைச் சீரமைத்து, எண்ணெய் பம்பிங் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கு எவ்வளவு காலம் தேவைப்படும் என்பது இதுவரை தெளிவாகவில்லை.








