சவுதி அரேபியாவின் கிழக்கு–மேற்கு எண்ணெய் குழாய்த்தடத்தின் மீது நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மற்றும் லெபனான் ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
சவுதியின் எண்ணெய் குழாய்த்தடத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல், அந்நாட்டின் இறையாண்மையை அப்பட்டமாக மீறும் “ஆக்கிரமிப்பு நடவடிக்கை” என UAE வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு குவைத் மற்றும் பஹ்ரைனும் ஏற்கனவே கண்டனம் தெரிவித்திருந்தன.
மேலும், தாக்குதலில் காயங்கள் ஏற்பட்டதுடன், பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளதாக இரு நாடுகளும் தெரிவித்துள்ளன.








