தமிழறிஞரும் பிரபல பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா வயது முதுமை காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று (11) காலமானார்.
அவரது மறைவுச் செய்தி அறிந்து பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பொதுமக்களின் அஞ்சலிக்காக சாலமன் பாப்பையாவின் உடல் ஞான ஒளிவுபுரம் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
அங்கு பொதுமக்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது இறுதிச்சடங்கு இன்று காலை 11.00 மணிக்குப் பின்னர் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், சாலமன் பாப்பையாவின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என அமைச்சர் நிர்மல்குமார் அறிவித்துள்ளார்.
தமிழறிஞர்கள் உள்ளிட்ட பலரின் கோரிக்கையை ஏற்று சாலமன் பாப்பையாவின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.







