அரச குடும்ப வரலாற்றில் மிகவும் பிரபலமான ஆடைகளில் ஒன்றாகக் கருதப்படும் இளவரசி டயானாவின் ‘Revenge Dress’ ஏலத்தில் விற்பனைக்கு வரவுள்ளது.
1994ஆம் ஆண்டு அப்போதைய இளவரசர் சார்ல்ஸ், தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் திருமணத்துக்கு புறம்பான உறவில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்ட அதே இரவில், டயானா இந்தக் கறுப்பு நிற Christina Stambolian ஆடையை அணிந்திருந்தார்.
எதிர்வரும் டிசம்பர் மாதம் நியூயோர்க்கில் உள்ள Sotheby’s ஏல நிறுவனத்தில் இந்த ஆடை ஏலம் விடப்படவுள்ளது.
இதன் மூலம் 150,000 முதல் 300,000 அமெரிக்க டொலர்கள் வரை தொகை கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.








