வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்திர தீர்த்தத் திருவிழா இன்று (10) காலை சிறப்பாக நடைபெற்றது.
கடந்த 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆலய வருடாந்திர மகோற்சவம் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை 6.15 மணிக்கு வசந்தமண்டப பூஜை இடம்பெற்றதைத் தொடர்ந்து தீர்த்தத் திருவிழா நடைபெற்றது.
தீர்த்தத் திருவிழாவில் கலந்துகொள்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், புலம்பெயர் நாடுகளில் இருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் நல்லூர் ஆலயத்திற்கு வருகை தந்திருந்தனர்.
இதன்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி, அங்கப்பிரதட்சணம், கற்பூரச்சட்டி உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.









