திரையுலகப் பிரபலங்கள் AI Prompt-ஐ பயன்படுத்தி 1980களின் தோற்றத்திற்கு மாறிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
சினிமா மட்டுமின்றி, நம் கைகளில் இருக்கும் ஸ்மார்ட்போன் வரை AI-ன் ஆதிக்கம் வந்துவிட்டது. ஒரு தகவலை தெரிந்துகொள்ள வேண்டும் என்றாலும் AI-ஐ நாடுகிறோம். அதேபோல், நமக்குப் பிடித்த வகையில் புகைப்படங்களை மாற்ற வேண்டும் என்றாலும் AI பெரிதும் உதவி வருகிறது.
ஒருபுறம் AI தொழில்நுட்பம் பல்வேறு பயனுள்ள விடயங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தாலும், மறுபுறம் சிலர் இதனை தவறாகப் பயன்படுத்தி திரைப் பிரபலங்களை தவறாக சித்தரிக்கும் AI புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் உருவாக்கி வருகின்றனர். இது பலரிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக திரையுலகப் பிரபலங்கள் மத்தியில் புதிய AI டிரெண்ட் ஒன்று கவனம் பெற்றுள்ளது. ChatGPT, Gemini போன்ற AI தளங்களில் Prompt-களை பயன்படுத்தி, தங்களது தற்போதைய புகைப்படங்களை 1980களின் காலகட்டத்தில் எடுத்தது போன்ற தோற்றத்திற்கு மாற்றி வருகின்றனர்.
இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.
அவர்களைப் போல நீங்களும் 80s காலகட்டத்திற்குச் செல்ல விரும்புகிறீர்களா?
அப்படியானால், உங்களது சாதாரண புகைப்படத்தை 1980களின் ஸ்டைலுக்கு மாற்ற இந்த AI Prompt-ஐ பயன்படுத்திப் பாருங்கள். 
AI Prompt:
“Using my uploaded photo as a reference, show me what I would have looked like in the 1980s. Preserve my face, facial features, skin tone, and identity exactly without changing my face. Give me an authentic 1980s look with voluminous retro hair or a classic hairstyle, iconic period fashion, accessories, and makeup. Set the photo in a nostalgic 1980s background with warm faded analog tones, soft-focus, subtle film grain, and an aged photo texture.”
அல்லது எளிமையாக:
“What would I look like in the 80s?”
உங்கள் புகைப்படத்தை AI-ல் பதிவேற்றி இந்த Prompt-ஐ பயன்படுத்தி 80s லுக்கில் உங்களை நீங்களே பார்த்துக்கொள்ளலாம்!





