உலக சந்தையில் எண்ணெய் விலை தொடர்ந்து நான்காவது அமர்வாக உயர்வடைந்துள்ளது. பிரென்ட் கச்சா எண்ணெய் எதிர்கால விலை 1.57 டொலர் அல்லது 1.6 சதவீதம் அதிகரித்து, 00:01 GMT நிலவரப்படி பீப்பாய் ஒன்றுக்கு 99.49 டொலராக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சஸ் இன்டர்மீடியட் (WTI) கச்சா எண்ணெய் விலையும் 1.60 டொலர் அல்லது 1.72 சதவீதம் அதிகரித்து, பீப்பாய் ஒன்றுக்கு 94.63 டொலராக வர்த்தகமாகியுள்ளது.
வொஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையிலான போர் பிராந்தியம் முழுவதும் தொடர்ந்து பரவி வரும் நிலையில், வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்க இராணுவ இலக்குகள் மீது ஈரான் புதிய தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
ஆறு மாதங்களாக நீடித்து வரும் போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நம்பிக்கைகள் குறைந்துள்ளதுடன், மீண்டும் மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், ஆகஸ்ட் மாத தொடக்கத்திலிருந்து பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 25 சதவீதம் உயர்ந்துள்ளது.








