கொழும்பு மரதன் – 2026 போட்டி எதிர்வரும் செப்டம்பர் 13ஆம் திகதி காலி முகத்திடலில் நடைபெறவுள்ளது. இது 50ஆவது தேசிய விளையாட்டு விழாவுடன் இணைந்ததாக நடத்தப்படவுள்ளது.
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு, விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களம் உள்ளிட்ட தொடர்புடைய நிறுவனங்களின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த சர்வதேச மரதன் போட்டி, நாட்டில் விளையாட்டு கலாசாரத்தை மேம்படுத்துவதுடன் சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதில் முழு மரதன், அரை மரதன், 10 கிலோமீற்றர் ஓட்டப்போட்டி மற்றும் 5 கிலோமீற்றர் Fun Run ஆகிய போட்டிகள் இடம்பெறவுள்ளன. தேசிய மற்றும் சர்வதேச அளவில் பெருமளவான ஓட்டப்பந்தய வீரர்கள் இதில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிகழ்வை நடத்துவதற்கான செயற்படுத்தல் திட்டம், வெற்றியாளர்களுக்கு வழங்கப்படவுள்ள பரிசுத் தொகை மற்றும் போட்டிகளுக்கான ஓட்டப்பாதைகள் உள்ளிட்ட விபரங்களை இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அமைச்சரவைக்கு முன்வைத்தார்.இதுதொடர்பான ஏற்பாடுகளை அமைச்சரவை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்துகொண்டது.









