ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) எதிர்வரும் நாட்களில் அனுராதபுரத்தில் நடத்தவுள்ள பேரணிக்கு ஐக்கிய தேசியக் கட்சி (UNP) தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது.
SLPP பொதுச் செயலாளர் சாகர காரியவசத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன இந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
SLPP தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தலைமையில் இந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனுராதபுர பேரணியை சீர்குலைக்கும் நோக்கிலேயே நாமல் ராஜபக்ஷ அண்மையில் கைது செய்யப்பட்டதாகவும் வஜிர அபேவர்தன குற்றஞ்சாட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெறவுள்ள இந்தப் பேரணிக்கு ஐக்கிய தேசியக் கட்சி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.









