இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 160ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்பட்டது.
இதனையொட்டி, பொலிஸ் தினத்தின் பிரதான நிகழ்வுக்கு மேலதிகமாக, நாடளாவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட நான்கு சமயத் தலங்களில் விசேட சமய நிகழ்வுகளும் இடம்பெற்றன.
அந்த வகையில், தலைநகர் கொழும்பில் வழமைபோன்று கொழும்பு பெரிய பள்ளிவாசலில், கொழும்பு 12, டேம் வீதி பொலிஸ் நிலையத்துடன் இணைந்து இன்று மாலை விசேட சமய நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பள்ளிவாசலின் தலைவர் தாஹிர் ரஸீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், டேம் வீதி பொலிஸ் நிலையத்தின் பதில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி I.P. ரஸ்மெண்டர, நிலையத்தின் நிர்வாகப் பிரிவுப் பொறுப்பதிகாரி S.I. பிரியந்த, சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பிரிவுகளின் பொறுப்பதிகாரி S.I. பிரேமரத்தன உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அத்துடன், பள்ளிவாசலின் நிதிப் பொறுப்பாளர் A. பஸால் மொஹிடீன், உதவிப் பொருளாளர் ஜவ்பர் சித்தீக் உள்ளிட்ட நம்பிக்கையாளர்களும் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
நிகழ்வில் வரவேற்புரையை பள்ளிவாசலின் பொருளாளர் A. பஸால் மொஹிடீன் வழங்கினார். இதன்போது பொலிஸ் திணைக்களம் தொடர்பான விசேட உரையை பொலிஸ் நிலைய நிர்வாகப் பிரிவுப் பொறுப்பதிகாரி S.I. பிரியந்த வழங்கினார்.
தொடர்ந்து, பொலிஸ் அதிகாரிகள் ஆற்றிவரும் சிறப்பான சேவைகளுக்கும் அவர்களின் நலன்களுக்கும், நாட்டில் அமைதி மற்றும் சமாதானம் நிலவுவதற்கும் வேண்டி பள்ளிவாசலின் பிரதம இமாம் மெளலவி எஸ்.எம். ரிஸ்வான் பஹ்ஜி தலைமையில் விசேட துஆ பிரார்த்தனை இடம்பெற்றது.
ஏ.எஸ்.எம். ஜாவித்












