யாழ்ப்பாணம், பலாலி அந்தோனிபுரம் பகுதியில் கிணறு ஒன்றைத் துப்பரவு செய்யும் போது பெருமளவான வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் தொடர்பில் பலாலி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கிணற்றுக்குள் காணப்படும் வெடிபொருட்களை பாதுகாப்பாக மீட்பதற்காக மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெறுவதற்கான நடவடிக்கைகளில் பொலிஸார் தற்போது ஈடுபட்டுள்ளனர்.









