முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்றுமுன்னர் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் (CIABOC) ஆஜராகியுள்ளார்.
வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், அவர் இன்று முற்பகல் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.









