நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப் பேரழிவினால் உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், தமது இரங்கலையும் ஆதரவையும் தெரிவிக்கும் வகையில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் மற்றும் உதவிப் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸிம் ஆகியோர் இன்று (02) கொழும்பிலுள்ள நேபாள தூதரகத்திற்கு விஜயம் செய்தனர்.
இதன்போது, இலங்கைக்கான நேபாள பொறுப்புத் தூதர் கௌரவ விஜய்குமார் ராவுத்தை சந்தித்த ஜம்இய்யாவின் பிரதிநிதிகள், ஜம்இய்யாவின் இரங்கல் செய்தியை அவரிடம் கையளித்தனர்.
மேலும், தூதரகத்தில் வைக்கப்பட்டிருந்த இரங்கல் பதிவேட்டிலும் ஜம்இய்யாவின் பிரதிநிதிகள் கையெழுத்திட்டனர்.









