இலங்கையின் உள்நாட்டு இறைவரித் திணைக்களமும் ஏனைய அபிவிருத்தியடைந்த நாடுகளில் காணப்படும் தரத்திற்கு உயர்த்தப்பட வேண்டும் என ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக தெரிவித்துள்ளார்.
உழைக்கும் போதே அறவிடப்படும் வரி (PAYE Tax) காரணமாக மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று (01) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், இந்த நிலைமையை விரைவாகச் சீர்செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
உள்நாட்டு இறைவரி ஆணையாளர்களின் சங்கத்தின் 21ஆவது மாநாடு பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக மற்றும் உள்நாட்டு இறைவரி பணிப்பாளர் நாயகம் ஆர்.பி.எச். பெர்னாண்டோ ஆகியோரின் தலைமையில் கொழும்பில் நடைபெற்றது.
இதன்போதே ஜனாதிபதியின் செயலாளர் மேற்கண்ட கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.









