அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் தற்போதைய உடல்நிலை தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சுரேஷ் சலேவுக்கு மேலதிக மருத்துவ சிகிச்சை தேவையா என்பது தொடர்பான தகவல்களையும் அறிக்கையில் உள்ளடக்குமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.









