22வது திருத்த சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை இன்று (02) காலை மீண்டும் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று (01) காலை 10 மணியளவில் ஆரம்பமான விசாரணை, இரவு 10.30 மணி வரை நீடித்ததாக அத தெரண தெரிவித்துள்ளது.
மனுதாரர் தரப்பு, இடைக்கால மனுதாரர்கள் மற்றும் தலைமை வழக்கறிஞர் தரப்பினரின் மேலதிக கருத்துகள் இன்று முன்வைக்கப்படவுள்ளன.









