ஹொரணை, நாரகல பாலத்திற்கு அருகில் களு கங்கையில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்களில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
31.08.2026 பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், இவ்வாறு காணாமல் போனவர் 19 வயதுடைய இளைஞராவார்.
காணாமல் போன இளைஞனைத் தேடும் விசேட தேடுதல் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
சம்பவம் தொடர்பில் ஹொரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.









