மலேசியாவின் 69ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு, Universal Gateway Holdings (Pvt) Ltd., Sri Lanka நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான மொஹமட் அஃப்தாப், மலேசிய அரசாங்கத்திற்கும் அந்நாட்டு மக்களுக்கும் தனது இதயபூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
மலேசியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நீண்டகால நட்புறவு, பரஸ்பர மரியாதை மற்றும் ஒத்துழைப்பு காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வர்த்தகம், முதலீடு, சுற்றுலா மற்றும் இருநாட்டு மக்களுக்கு இடையிலான தொடர்புகள் உள்ளிட்ட துறைகளில் அதிக ஒத்துழைப்பை ஏற்படுத்துவதன் மூலம், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் எதிர்காலத்தில் மேலும் வலுப்பெறும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மலேசியாவின் 69ஆவது தேசிய தினம் அந்நாட்டிற்கும் அதன் அனைத்து மக்களுக்கும் தொடர்ச்சியான அமைதி, ஒற்றுமை, செழிப்பு மற்றும் முன்னேற்றத்தை கொண்டுவர வேண்டும் என்றும் அவர் வாழ்த்தியுள்ளார்.
“Selamat Hari Merdeka!” – இனிய தேசிய தின வாழ்த்துகள்!









