கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றைய தினம் (31) அமெரிக்க டொலருக்கு நிகராக மேலும் அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 323.51 ரூபாவிலிருந்து 323.42 ரூபாவாகக் குறைந்துள்ளது.
அதேவேளை, டொலரின் விற்பனை விலையும் 332.66 ரூபாவிலிருந்து 332.48 ரூபாவாகக் குறைந்துள்ளது.
இதனிடையே, வளைகுடா நாடுகளின் நாணயங்கள் உள்ளிட்ட ஏனைய நாணயங்களுக்கு நிகராகவும் இலங்கை ரூபாவின் பெறுமதியில் சிறியளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது.









