அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) மற்றும் அரசாங்க பல் வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆகியன, முன்மொழியப்பட்ட 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கத் தீர்மானித்துள்ளன.
இரு சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவிக்கையில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) உள்ளிட்ட ஏனைய தொழில்சார் அமைப்புகளுடன் இணைந்து, இந்தத் திருத்தத்திற்கு எதிராக கூட்டாகச் செயற்படுவதற்கு இணக்கம் எட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டனர்.
இந்நிலையில், தொழில்சார் அமைப்புகள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் மத்தியில் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிரான எதிர்ப்பு மேலும் வலுப்பெற்று வருகிறது.
இந்தத் திருத்தத்தை சவாலுக்கு உட்படுத்தி, ஏற்கனவே பல மனுக்கள் இலங்கை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.









