இங்கிலாந்துக்கு எதிரான எதிர்வரும் ஒருநாள் தொடருக்கான இலங்கை அணியில் முன்னாள் அணித்தலைவர் தசுன் ஷானக்க மீண்டும் இணைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணத்தை முன்னிட்டு, மத்திய வரிசையில் போட்டியை நிறைவு செய்யக்கூடிய வீரர்களின் தேர்வை வலுப்படுத்த இலங்கை அணி திட்டமிட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, தசுன் ஷானக்க மீண்டும் 50 ஓவர் அணியில் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை, லங்கா பிரீமியர் லீக் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சரித் அசலங்கவும் T20I அணிக்கு மீண்டும் திரும்ப வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.









