காசா நகரின் தென்மேற்குப் பகுதியில் உள்ள ஷேக் இஜ்லின் பகுதியில், பல ஆண்டுகளாகப் போரால் கைவிடப்பட்டிருந்த திராட்சைத் தோட்டங்களில் மீண்டும் அறுவடைப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக நீடித்த போரின் காரணமாக விவசாயப் பணிகளை கைவிட வேண்டியிருந்த 50 வயதான காலித் அபு மதீன், தற்போது தனது தொழிலாளர்களுடன் இணைந்து போரில் உயிர் பிழைத்த திராட்சைக் கொடிகளை பராமரித்து, பழுத்த திராட்சைக் குலைகளை அறுவடை செய்து வருகிறார்.
பல தலைமுறைகளாக அவரது குடும்பத்தினர் இப்பகுதியில் திராட்சை மற்றும் அத்திப்பழங்களைப் பயிரிட்டு வருகின்றனர். தந்தை மற்றும் தாத்தாவிடமிருந்து கிடைத்த நிலத்தில் விவசாயத்தைத் தனது முழுநேரத் தொழிலாக காலித் தொடர்ந்து வந்துள்ளார்.போருக்கு முன்னர் திட்ட முகாமைத்துவத் துறையில் பணியாற்றிய அவர், பின்னர் தனது குடும்பத்தின் விவசாயத் தொழிலில் முழுமையாக ஈடுபட்டார்.
இந்த ஆண்டு அறுவடை தனக்கு மிகவும் முக்கியமானது எனத் தெரிவித்த காலித், “நான் மீண்டும் எனது ஆன்மாவிடம் திரும்பி வந்ததைப் போல உணர்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
போரினால் பெரும் அழிவைச் சந்தித்த காசாவில், மீண்டும் துளிர்க்கும் திராட்சைக் கொடிகள் மக்களின் வாழ்வாதாரம் மட்டுமன்றி, மீண்டும் வாழ வேண்டும் என்ற அவர்களின் நம்பிக்கையையும் வெளிப்படுத்துகின்றன.
இது தொடர்பான முழுமையான கட்டுரை விரைவில்









