ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் பல பகுதிகளில் இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக பாலஸ்தீன செய்தி நிறுவனமான வஃபா (WAFA) தெரிவித்துள்ளது.புர்கா (Burqa) மற்றும் அர்ராபே (Arrabeh) உள்ளிட்ட கிராமங்களில் இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புர்கா பகுதியில் உள்ள உள்ளூர் விவசாயிகளை இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் தாக்கியதுடன், அவர்களுக்கு அருகில் துப்பாக்கிச் சூடும் நடத்தியதாக வஃபா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், விவசாயிகளில் ஒருவருக்குச் சொந்தமான வாகனம் ஒன்றை தீ வைத்து எரிக்கவும் அவர்கள் முயன்றதாக கூறப்படுகிறது.
அதேவேளை, அர்ராபே பகுதியில் உள்ள உள்ளூர் ஒலிவ் தோட்டங்களில் இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் தங்களது கால்நடைகளை மேயவிட்டதுடன், அப்பகுதி மக்களையும் தாக்கியதாக வஃபா தெரிவித்துள்ளது.









