சூடானின் வடக்கு மாகாணத்தில் (Northern State) பேரீச்சம்பழ மரங்கள் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்திற்கு முக்கிய ஆதாரமாக உள்ளன.
எனினும், கடந்த சில ஆண்டுகளாக நிலவி வரும் வறட்சி மற்றும் தொடர்ச்சியான காட்டுத்தீ காரணமாக ஆயிரக்கணக்கான பேரீச்சம்பழ மரங்கள் சேதமடைந்துள்ளன.
இதனால், பேரீச்சம்பழ மரங்களை நம்பி வாழும் இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகமான அல்ஜசீரா தெரிவித்துள்ளது.








