காலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்வேல பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் 24 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆகஸ்ட் 28ஆம் திகதி இடம்பெற்ற இந்த மோதலின்போது, கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் குறித்த இளைஞர் காயமடைந்துள்ளார். பின்னர் அவர் காலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
மோதலில் காயமடைந்த மேலும் இருவர் சிகிச்சைக்காக காலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இரு குழுக்களுக்கும் இடையில் முன்னதாக ஏற்பட்டிருந்த தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த மோதல் தீவிரமடைந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் வலவத்த பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் 29 வயதுடைய இரு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.









