விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, தெஹிவளை கவுடான வீதி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்று வரும் அபிவிருத்திப் பணிகளை ஆகஸ்ட் 28ஆம் திகதி ஆய்வு செய்தார்.அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மேம்படுத்தப்பட்ட விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி வசதிகளை வழங்கும் நோக்கில் இந்த அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஆய்வின்போது மைதானத்தின் தற்போதைய நிலை குறித்து பார்வையிட்ட அமைச்சர், எஞ்சியுள்ள பணிகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
மைதானத்தில் காணப்படும் குறைபாடுகள் விரைவில் நிவர்த்தி செய்யப்பட்டு, கிராமப்புற மற்றும் நகர்ப்புற விளையாட்டு மைதானங்களை முழுமையாக அபிவிருத்தி செய்யும் அரசாங்கத்தின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், இந்த மைதானம் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சமன்மலீ குணசிங்க, தெஹிவளை-மவுண்ட் லவினியா மாநகர சபையின் மேயர், மாநகர சபை உறுப்பினர்கள், பிரதேச பிரதிநிதிகள் மற்றும் அமைச்சின் அதிகாரிகளும் இந்த ஆய்வில் கலந்துகொண்டனர்.











