வெனிசுலாவின் எண்ணெய் இருப்புகளில் 65 பில்லியன் பீப்பாய்களைக் கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்கா, வெனிசுலாவுடன் பிரம்மாண்டமான ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோ, பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் மற்றும் வெனிசுலாவின் பதில் ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் ஆகியோர் இந்த ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக டிரம்ப் தனது சமூக ஊடகப் பதிவின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.
உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தம் இதுவென்றும் ஜனாதிபதி டிரம்ப் தனது பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஒப்பந்தம் தொடர்பாக வெனிசுலாவின் பதில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிக்கையில், 65 பில்லியன் பீப்பாய்கள் திறன் கொண்ட 17 எண்ணெய் வயல்களை மேம்படுத்துவதே இதன் நோக்கம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், இது வெனிசுலாவின் மொத்த எண்ணெய் இருப்பில் ஐந்தில் ஒரு பங்கு என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் வெனிசுலாவின் பெட்ரோலியத் துறைக்கு 100 பில்லியன் டொலர் முதலீட்டை ஈர்க்கவும், காராகாஸ் நிர்வாகத்திற்கு 209 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான வரி வருவாயை ஈட்டவும் வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் வெற்றிகரமாக அமுல்படுத்தப்படுவதன் மூலம், வெனிசுலாவில் இதுவரை பயன்படுத்தப்படாத மிகப்பெரிய பெட்ரோலிய இருப்புகளைக் கைப்பற்றும் வாய்ப்பு அமெரிக்காவிற்குப் கிட்டும்.









